தகவல் - சம்மாந்துறை அன்சார்.
சவுதி அரேபியாவில் கடந்த ஆண்டு மாத்திரம் 131 பேர் வரை பாலைவனங்களில் வழி தவறிச் சிக்கி காணாமல் போயுள்ளதாக சவுதி அரேபியாவில் மேற்கொள்ளப்பட்ட புள்ளிவிபரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரியாத்தில் உள்ள இங்டாட் (Ingad) என்ற மீட்புக் குழுவினரின் கருத்துப் படி, கடந்த வருடம் பாலைவனங்களில் பல்வேறு காரணங்களினால் காணாமல் ஆக்கப்பட்ட 131 பேரில் 20 பேர் வரை பாலைவனத்தில் சிக்கி உணவு-நீர் இன்றி பட்டினியால் மரணமடைந்துள்ளதாகவும், 100 பேர் வரை மீட்புக் குழுவினரால் நல்ல ஆரோக்கியமான நிலையில் மீட்கப்பட்டதாகவும், 11 பேர் தொடர்பில் இதுவரை எந்தத் தகவலும் இல்லை எனவும் மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
பாலைவனங்களில் வழி தவறி காணாமல் போவோரை பெரும்பாலும் 24 மணி நேரத்தில் சவுதி மீட்புக் குழுவினர் கண்டு பிடித்து மீட்டெடுத்து விடுவதாகவும் சிலரை கண்டுபிடிப்பது கடினமாகவிருப்பதினால் அவர்கள் பாலைவனத்திலேயே இறந்தும் விடுவதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
காணாமல் போனோ 131பேரில் ரியாத் (Riyadh) பாலைவனத்தில் 41 பேரும், ஷர்கியா (Sharqia) பாலைவனத்தில் 13 பேரும், நஜ்ரான் (Najran) பாலைவனத்தில் 5 பேரும், அசிர் (Asir) பாலைவனத்தில் 1 பேரும், மக்கா (Mecca) பாலைவனத்தில் 2 பேரும், மதீனா (Medina) பாலைவனத்தில் 3 பேரும், ஹயில் (Ha’il) பாலைவனத்தில் 31 பேரும், கசீம் (Qassim) பாலைவனத்தில் 10 பேரும், தபூக் (Tabuk) பாலைவனத்தில் 11 பேரும், அல் ஜாவ்ஃ (Al Jawf) பாலைவனத்தில் 3 பேரும் மற்றும் வடக்கு (Northern Borders) பாலைவன எல்லைகளில் 11 பேரும் காணாமல் போயிள்ளனர்.
சவுதி அரேபியாவின் நிலப்பரப்பில் பாதிக்கும் மேற்பட்ட பகுதி பாலைவன நிலப்பரப்புக்களாலும் என்பது குறிப்பிடத் தக்கது.

