தகவல் - சம்மாந்துறை அன்சார்.
சவுதி அரேபியாவில் தேச துரோக குற்றமிழைத்தமைக்காக மூன்று படைவீரர்களுக்கு துாக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக சவுதி அரேபியா பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
சவுதி அரேபிய இராணுவ நலனுக்கு தீங்கு விளைவிற்கும் வகையில் நடந்து கொண்டதாகவும், எதிரிளுக்கு ஒத்துழைப்பு வழங்கி தேசத்திற்கு துரோகம் செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டு, குற்றம் நிறுபிக்கப்பட்ட பின்னர் மூவருக்கும் துாக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.