Ads Area

அமீரகத்தில் 70 வயது முதியவரை திருமணம் செய்ய வற்புறுத்தியதால் 21 வயது இளம் பெண் மாடியிலிருந்து குதித்து தற்கொலை.

தகவல் - சம்மாந்துறை அன்சார்.

ஐக்கிய அரபு இராஜ்ஜிய சார்ஜா (Sharjah) வில் உள்ள முவைலியா (Muwailih) பிரதேசமொன்றில் வசிக்கும் ஆசிய நாட்டைச் சேர்ந்த (பாகிஸ்த்தான்) 21 வயது இளம் பெண் ஒருவர் தனது வீட்டின் 5வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. 

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,


சார்ஜாவில் வசிக்கும் 21 வயது இளம் பெண் ஒருவரை அவரது விருப்பத்திற்கு மாற்றமாக அவரது பெற்றோர் 70 முதியவர் ஒருவருக்கு மணமுடித்து வைக்க அப் பெண்ணை தங்களது சொந்த நாட்டிக்கு அனுப்பி வைக்க முடிவெடுத்துள்ளனர்.


தனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை, தான் தொடர்ந்தும் படிக்க வேண்டும், முதியர் ஒருவரை திருணம் செய்ய தனக்கு உடன்பாடில்லை என தங்களது பெற்றோரிடம் தெரிவித்தும் அவர்கள் வற்புறுத்தியதால் அப் பெண் 5வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

சம்பவ இடத்திற்கு விரைந்த சார்ஜா பொலிஸார் பெண்ணின் குடும்பத்தாரை கைது செய்து தற்போது விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe