Ads Area

அபுதாபி Big Ticket இல் 12 மில்லியன் திர்ஹம் பணப் பரிசை வென்ற இலங்கையைச் சேர்ந்தவர்.

அபுதாபியில் திங்களன்று நடைபெற்ற மிஷ்பாக் அபுதாபி Big Ticket raffle draw தொடரில் இலங்கையை சேர்ந்த முகமது மிஷ்பாக் 12 மில்லியன் திர்ஹம் (3.3 மில்லியன் அமெரிக்க டாலர்) பணப் பரிசை வென்றுள்ளார்.

துபாயில் குடியிருப்பாளராக வசித்து வரும் முகமது மிஷ்பாக் ஏப்ரல் 29 அன்று வாங்கிய டிக்கெட் எண் 054978 இற்கே குறிப்பிட்ட பரிசு கிடைத்துள்ளது.

தற்போது இலங்கையில் வசித்து வரும மிஷ்பக் இற்கு தொலைபேசியில் இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்போது, ​​நான் இலங்கையில் இருக்கிறேன். நான் விடுமுறையில் இருக்கின்றேன். இது தொடர்பில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.

மிஷ்பாக்கைத் தவிர, மேலும் இரண்டு மில்லியனர்கள் உள்ளனர், அவர்கள் இருவரும் இந்தியர் , 3 மில்லியன் மற்றும் 1 மில்லியன் டாலர்களை வென்றவர்கள்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe