Ads Area

சவுதி அரேபியாவில் சர்வதேச விமானப் பயணம் தொடர்பில் வெளிவந்துள்ள தகவல்.

கோவிட் பரவல் காரணமாக சவுதி அரேபியா விதித்த சர்வதேச விமானங்களுக்கான பயணத் தடை மே-17 ஆம் தேதி நீக்கப்படும் என்று சவுதி உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. 

மே 17 ஆம் திகதி அதிகாலை ஒரு மணியளவில்,நாட்டின் நிலம், நீர் மற்றும் வான்வழி விமானப் போக்குவரத்து இயல்பு நிலைக்குத் திரும்பும். இதன் மூலம் குடிமக்கள் நாட்டிற்கு வெளியே பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இருப்பினும் இதுபோன்ற பயணங்களுக்கு சுகாதார அமைச்சகத்தின் அறிவுறுத்தல்களின்படி உள்துறை அமைச்சகம் தங்கள் நாட்டினருக்கு சில விதிமுறைகளை நிர்ணயித்துள்ளது. 

பயணிகள் இரண்டு டோஸ் கோவிட் தடுப்பூசி போடப்பட்டிருக்க வேண்டும் அல்லது ஒரு டோஸ் முடித்து 14 நாட்கள் கழிந்த நபராக இருக்க வேண்டும். இது தொடர்பான தகவல் தவக்கல்னா பயன்பாட்டில் பதிவாகி இருக்க வேண்டும். அதுபோல் கோவிட் நோயிலிருந்து மீண்டு ஆறு மாதங்கள் கழித்து நபர்கள்,இதுவும் தொடர்பான தகவலும் தவக்கல்னா பயன்பாட்டில் பதிவாகி இருக்க வேண்டும்.18 வயதிற்கு உட்பட்டவர்கள் பயணம் செய்ய விரும்பினால் அவர்கள் கோவிட் நோய்க்கு எதிராக சவுதி அரேபியாவின் மத்திய வங்கி ஒப்புதல் அளித்த சுகாதார காப்பீட்டை எடுத்திருக்க வேண்டும். 

வெளிநாட்டிலிருந்து குவைச் திரும்பும் எட்டு வயதுக்கு மேற்பட்டவர்கள் உள்நாட்டில் தங்கள் வீட்டில் 7 நாட்கள் தனிமைப்படுத்தலை முடித்து, பின்னர் பி.சி.ஆர் கோவிட் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். கோவிட் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு பயணிக்கும் போது கவனமாக இருக்க வேண்டும் எனவும்,சமூக தூரத்தை பராமரித்தல்,முகக்கவசம் அணிவது போன்ற காரியங்களில் கவனமாக இருக்கவும் உள்துறை அமைச்சகம் மக்களை எச்சரித்துள்ளது. 

இருப்பினும், மே-17 அன்று சர்வதேச பயணத் தடை நீக்கப்படும் போது தற்போது பயணத் தடை விதிக்கப்பட்டுள்ள 20 நாடுகளுக்கான பயணம் அந்த நாளிலிருந்து அனுமதிக்கப்படுமா...??? என்பது குறித்தும், நாட்டில் வெளிநாட்டினரின் பயணிக்க விதிமுறைகள் என்னவாக இருக்கும் என்பது குறித்து உள்துறை அமைச்சகம் தெளிவான வழிகாட்டுதல்களை வெளியிடவில்லை. இந்த விஷயங்கள் தொடர்பான கூடுதல் தகவல்கள் எதிர்வரும் நாட்களில் அறிவிக்கப்படும் என்று நம்பப்படுகிறது. 



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe