தகவல் - சம்மாந்துறை அன்சார்.
ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் உள்ள ராஸ் அல் கைமாவில் உள்ள நீதிமன்றம் ஒன்று கணவரின் தொலைபேசியினை உளவு பார்த்து அவரது தனியுரிமையினை மீறிய குற்றத்திற்கான மனைவிக்கு 5,400 திர்ஹம் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.
எனது மனைவி தனது மொபைல் போனை எனது அனுமதியில்லாமல் உளவு பார்த்து அதில் உள்ள எனது புகைப்படங்களை மற்றவர்களோடும், குடும்பத்தினரோடும் பகிர்ந்து கொண்டமையினால் தான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும் அதற்காக தனக்கு நஷ்டஈடு பெற்றுத் தர வேண்டும் எனவும் கணவர் வழக்குத் தொடந்துள்ளார்.
குறித்த வழக்கினை விசாரனை செய்த நீதிபதி மனைவி மீது குற்றமிருப்பது ஆதாரபூர்வமாக நிறுபிக்கப்பட்டதனைத் தொடர்ந்து அவருக்கு 5400 திர்ஹம் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.