தகவல் - சம்மாந்துறை அன்சார்.
சவுதி அரேபியாவில் தனது மகனை கொலை செய்த கொலையாளிக்கு நேற்று திங்கள் கிழமை (24-05-2021) மரண தண்டனை நிறைவேற்றுவதற்கு தயாராக இருந்த சில நிமிடங்களுக்கு முன்னர் அவருக்கு மன்னிப்பு வழங்கி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார் சவுதி தந்தை ஒருவர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
சவுதி அரேபியாவின் வடமேற்கு பிராந்தியத்தில் உள்ள தபூக் பிரதேசத்தைச் சேர்ந்த அவத் சுலைமான் அல்-அம்ரானி என்பர் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சண்டை ஒன்றில் மற்றொரு சவுதி நபரால் கொலை செய்யப்பட்டுள்ளார். இந் நிலையில் கொலை நிருபிக்கப்பட்டு அவருக்கு நேற்று மரண தண்டனை நிறைவேற்ற ஆயத்தமாக இருந்த நிலையில் கொலையுண்டவரின் தந்தை கொலையாளியை மன்னித்து நெகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளார்.
மேலும் கொலையாளியின் குடும்பத்தினரிடமிருந்து தனது மகனைக் கொலை செய்தமைக்காக அவர் ஒரு சதம் கூட இரத்தப்பணம் (நஷ்டஈடு) பெற்றுக் கொள்ளவும் இல்லை என சவுதி அரேபிய செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த தந்தையின் மன்னிக்கும் மாண்பைப் பாராட்டி சமூக வலைத்தளங்களில் பலரும் அவரை புகழ்ந்து வருகின்றனர்.
சவுதி அரேபியாவில் ஒருவர் கொலைக் குற்றத்தில் ஈடுபட்டால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படும் இருந்தும் கொலையுண்டவரின் குடும்பத்தினர் கொலையாளியிடம் நஷ்ட ஈடு கோரி, நஷ்ட ஈட்டைப் பெற்றுக் கொண்டாலோ அல்லது அவரை மன்னித்தாலோ கொலையாளி விடுதலை செய்யப்படுவார் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.
செய்தி மூலம் - https://www.arabnews.com