Ads Area

பயணத் தடை காரணமாக சவுதிக்கு திரும்ப முடியாதவர்களின் விசாக்களை இலவசமாக நீட்டிக்க மன்னர் சல்மான் உத்தரவு.

சவுதி அரேபியாவிற்குல் நுழைய பயணத் தடை விதிக்கப்பட்டுள்ள  நாடுகளிலிருந்து மீண்டும் சவுதிக்கு திரும்ப முடியாத நபர்களின் விசாக்களை ஜூன் 02ம் திகதி வரை இலவசமாக நீட்டிக்க மன்னர் சல்மான் உத்தரவிட்டுள்ளார்.

விடுமுறை உள்ளிட்ட பல்வேறுபட்ட காரணங்களுக்காக தங்கள் நாடுகளுக்கு சென்று மீண்டும் சவுதிக்கு திரும்ப முடியாமல் சிக்கியுள்ள அனைத்து வெளிநாட்டினருக்கும் இக்காமா, Exit, Re-entry Visa உள்ளிட்ட விசாக்களும் இலவசமாக புதுப்பித்தல் செய்து வழங்கபடும். இதேபோல் Visit Visa வும் இலவசமாக நீட்டிப்பு செய்து வழங்கப்படும். மன்னர் சல்மான் அவர்கள் இதற்காக சிறப்பு உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இந்த புதிய அறிவிப்பு சவுதியில் நேரடியாக நுழைவதற்காக தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ள இந்தியா, இலங்கை உட்பட 20 ற்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த மக்களுக்கு மிகவும் ஆறுதலான செய்தி ஆகும். இது குறித்த விரிவான விவரங்கள் வெளியிடப்படவில்லை. இதற்கு தேவையான நடவடிக்கைகள் வரும் நாட்களில் முடிக்கப்படும். 

இதற்காக மொத்த செலவையும் நிதி அமைச்சகம் ஏற்கும். புதுப்பித்தல் தொடர்பான நடவடிக்கைகள் வரும் நாட்களில் National Information Center உடன் சவுதி பாஸ்போர்ட் இயக்குநரகம்(ஜவாசத்) இணைந்து தேவையான நடைமுறைகளை நிறைவு செய்யும். இந்த விசாக்கள் தானாக Auto Renewal முறையில் புதுப்பிக்கப்படும். 

செய்தி மூலம் - https://saudigazette.com.sa




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe