Ads Area

விமான நிலைய தடை நீக்கப்பட்டவுடன் வௌிநாட்டில் இருந்து பயணிகள் இலங்கைக்கு வருவதற்கு அனுமதி!

வௌிநாட்டில் இருந்து பயணிகள் இலங்கைக்கு வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, வெளிநாட்டில் இருந்து இலங்கைக்குள் பிரவேசிக்க விதிக்கப்பட்டிருந்த தடை எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் நீக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், கடந்த 14 நாட்களுக்குள் இந்தியாவுக்குச் சென்ற பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் மேலதிக அறிவிப்பு வரும் வரை தொடரும் என்று இலங்கையின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் தலைவர் உபாலி தர்மதாச தெரிவித்தார்.

கொரோனா பரவல் தீவிரமடைந்தததைத் தொடர்ந்து, மே 21 முதல் 31 வரை வௌிநாட்டில் இருந்து பயணிகள் இலங்கைக்குள் பிரவேசிப்பதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை பயணிகளின் வருகைக்கான தற்காலிக தடை நீக்கப்பட்டப் பின்னர், குறைந்தது 2500 ரஷ்ய சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான திட்டங்கள் உள்ளதாக ரஷ்யாவுக்கான  முன்னாள் இலங்கைத் தூதுவர், உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.

சுகாதார அதிகாரிகளிடமிருந்து இதற்கான அனுமதியைப் பெற்ற பின்னரே, ரஷ்யா சுற்றுலாப் பயணிகளை அழைத்து வர உத்தேசதித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் ஏரோஃப்ளோட் விமான நிறுவனம் மற்றும் இலங்கை ஏர்லைன்ஸ் ஆகியவற்றுடன் ரஷ்யாவின் தலைநகரம் மொஸ்கோவுக்கும்  கொழும்புக்கும்  இடையே, வாரத்திற்கு  குறைந்தது ஒரு விமான சேவையை முன்னெடுக்கவும் குறித்த திட்டத்தின் கீழ், வாரத்துக்கு குறைந்தது 275 பயணிகளை அழைத்து வருவது குறித்தும் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe