அமீர் முஹம்மட்.
கோவிட் -19 பயணத்தடையின் போது சம்மாந்துறையின் இன்றைய நிலைவரம் வெறிச்சோடிப் போயுள்ளது, வீதிகள் மக்களின் நடமாட்டமின்றி அமைதியாக காண்படுகிறது.
இருப்பினும் விவசாய நடவடிக்கைக்காக விவசாயிகள் சிலர் களைநாசினி மற்றும் பசளை விசுறுவதற்காக மிகக் குறைந்த எண்ணிக்கையானோர் போக்குவரத்து செய்வதனை அவதானிக்க முடிகிறது.
பொலிஸாரும் மற்றும் இராணுவத்தினரும் தரித்தும், மோட்டார் பைசிக்கிள்களிலும் ரோந்துப் பவனி மூலம் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் மேலும் விசேட அதிரடிப்படையினரும் ரோந்து நடவடிக்கை மேற்கொள்கின்றனர்.