அமீரகம் உட்பட 11 நாடுகளுக்கான பயணத் தடையை சவுதி அரேபியா நீக்கியுள்ளது. இதன்மூலம் துபாயிலிருந்து சவுதி வருவதற்காக காத்திருப்பவர்கள் நேரடியாக விமானம் மூலம் சவுதிக்கு வரலாம். இந்த தடை நாளை காலை 1 மணி முதல் நீக்கப்படுவதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் தடுப்பூசி பெற்றவர்கள் சவுதியில் ஹோட்டல் தனிமைப்படுத்துதல் தேவையில்லை. தடுப்பூசி பெறாதவர்கள் ஏழு நாள் தனிமைப்படுத்தல் அவசியமாகும்.
சவுதி அரேபியாவானது தீவிரமடைந்துள்ள கோவிட் பரவல் காரணமாக அமீரகம்,இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளுக்கு நேரடியாக பயணிகள் நுழைய தற்காலிகமாக தடை விதித்திருந்தது. இந்நிலையில் நேற்று (29/05/2021) ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உட்பட 11 நாடுகளின் மீதான பயண தடைகளை நீக்கியுள்ளாதாக தெரிவித்துள்ளது. இதன் மூலம் அமீரகம், ஜெர்மனி, அமெரிக்கா, அயர்லாந்து, இத்தாலி, போர்ச்சுகல், யு.கே, சுவீடன், சுவிட்சர்லாந்து, பிரான்ஸ் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் இருந்து பயணிகள் நுழைய விதித்திருந்த தடையை சவுதி அரேபியா மீண்டும் நீக்கியுள்ளது. புதிய உத்தரவின்படி இன்று (30/05/2021) ஞாயற்றுக்கிழமை அதிகாலை 1 மணி முதல் மேற்குறிப்பிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் சவுதியில் நேரடியாக நுழைய முடியும். இந்த புதிய உத்தரவை சவுதி உள்துறை அமைச்சகம் வெளியிட்டது. ஆனால் இந்தியா மீதான தடை தொடரும் என்பது குறிப்பிடத்தக்கது.
சவுதி அரேபியாவிற்கு நேரடியாக நுழைய முடியாத இந்தியர்களுக்கு இது சற்று ஆறுதலான செய்தியை ஆகும். சவுதிக்கு திரும்ப முடியாமல் அவதியுறும் இந்தியர்கள் அமீரகம் வழியாக சவுதி அரேயாவிற்கு நுழைய முடியும்.
தடை விதிக்கப்பட்டுள்ள 20 நாடுகளில் 11 நாடுகளின் மீதான தடையை இப்போது சவுதி அரேபியா நீக்கியுள்ள நிலையில்,இந்தியா உட்பட ஒன்பது நாடுகளின் மீதான தடை தொடர்ந்நு நடைமுறையில் இருக்கும். மேலும் தடை நீக்கப்பட்ட மேற்குறிப்பிட்ட 11 நாடுகளின் வழியாக சவுதி அரேபியாவில் நுழைவோருக்கு ஒரு வார நிறுவன தனிமைப்படுத்தல் (Institutional Quarantine) கட்டாயமாகும். அதேபோல் இந்த 11 நாடுகளில் கோவிட் நோயின் பரவல் குறைந்துவிட்டது என்ற மதிப்பீட்டின் அடிப்படையில் சவுதி உள்துறை அமைச்சகம் இந்த முடிவு எடுத்துள்ளது.