கொரோனா பரவல் காரணமாக இலங்கை, பாகிஸ்த்தான், பங்களாதேஷ் மற்றும் நேபாளம் போன்ற நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு அமீரகம் நுழைய தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.
இத் தடை மே 12 புதன்கிழமை இரவு 11.59 மணி முதல் நடைமுறைக்கு வருகிறது.
ட்ரான்சிட் விமானங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது
ஐக்கிய அரபு அமீரக தேசிய அவசர நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் இன்று திங்கள்கிழமை இந்த அறிவிப்பை வெளியிட்டது.
அமீரக இராஜதந்திர பணிகள், உத்தியோகபூர்வ பிரதிநிதிகள், கோல்டன் விசா வைத்திருப்பவர்கள் மற்றும் வர்த்தகர்களின் ஜெட் விமானங்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.