Ads Area

கிழக்கு பல்கலைக்கழகத்தில் வைத்து பல்கலைக்கழக மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பல்கலைக்கழக மாணவன் கைது !

நன்றி - க.சரவணன்

கிழக்கு பல்கலைக்கழக விடுதிக்கு அருகில் வைத்து பல்கலைக்கழக மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 25 வயதுடைய மாணவனை கைது செய்துள்ள சம்பவம் நேற்று சனிக்கிழமை நள்ளிரவு இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்ப பிரிவில் கல்வி கற்றுவரும் மாணவியை சம்பவதினமான நேற்றிரவு      ஆண்கள் விடுதிக்கும் பெண்கள் விடுதிக்கும் இடையிலுள்ள மரப்பத்தைப் பகுதில் வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

இதனையடுத்து உடனடியாக மாணவனை கைது செய்ததுடன் பாதிக்கப்பட்ட மாணவியை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இதில் கைது செய்யப்பட்ட மாணவன் விடுதியில் தங்கிருந்து வர்த்தகப்பிரிவில் கல்விகற்று வரும் அம்பாந்தோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடையவர் எனவும் இவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசர் தெரிவித்தனர்

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

செய்தி மூலம் - http://www.battinews.com



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe