இலங்கை விமான நிலையம் பத்து நாட்களுக்கு மூடப்படுகிறது, இதனடிப்படையில் வெளிநாடுகளிலிருந்து இலங்கை வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
மே 21ஆம் திகதி இரவு 11.59 மணி தொடக்கம் மே 31 இரவு 11.59 மணிவரையான காலப்பகுதியில் இலங்கை வருவதற்காக பயணிகளுக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகாரசபையின் தலைவர் உபுல் தர்மதாச தெரிவித்துள்ளார்.
எனினும் இந்த பத்து நாள் காலப்பகுதியில் இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்வோர் வழமையான சுகாதார வழிமுறைகளை பின்பற்றி செல்லலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

