Ads Area

சவுதி அரேபியாவில் மின்சாரம் தாக்கியதால் 44 வயதுடைய இந்தியர் ஒருவர் உயிரிழப்பு.

சவுதி அரேபியாவில் மின்சாரம் தாக்கியதால் இந்தியர் உயிரிழந்தார் என்ற துயரமான செய்தி வெளியாகியுள்ளது. உயிரிழந்தவர் கேரளா மாநிலம் மலப்புரம்,புத்தென்கோடு,வெட்டத்தூர் பகுதியை சேர்ந்த சஃபீர்(வயது-44) என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். 

அவர் மஜ்மாவில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவருடைய மனைவி பெயர் ஃபசீலா மற்றும் இந்த தம்பதிகளுக்கு மூன்று குழந்தைகள் உள்ளது. 

மரணமடைந்த சஃபீர் உடல் கிங் காலித் மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. சட்ட நடவடிக்கைகள் முடித்து உடலை திருப்பி தாயகம் அனுப்புவதற்காக பணிகளை, ரியாத் சமூக ஹெல்ப் ஆர்வலர்கள் நவாஸ் கண்ணூர்,முஜீப் காயம்குளம் ஆகியொருடன் சேர்ந்து உறவினர்கள் நஜீப் மற்றும் சபீர் ஆகியோர் செய்து வருகின்றனர் என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe