Ads Area

கல்முனை பிரதேச செயலக கொவிட்-19 செயலணியின் தொடர் சேவை.

(சர்ஜூன் லாபீர்) 

அதி மேதகு ஜனாதிபதி மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் விசேட பணிப்புரைக்கு அமைவாக தற்போதைய நாட்டின் கொவிட்-19 அசாதாரண சூழ் நிலை மற்றும் பயணத்தடையை கருத்திற் கொண்டு கல்முனை பிரதேச செயலாளர் ஜே லியாகத் அலி தலைமையிலான கொவிட்-19 விசேட செயலணி இரவு பகலாக அர்ப்பணிப்புடனான சேவையை மக்களுக்கு வழங்கி வருகின்றனர். 

அத்தியாவசிய சேவைகளுக்கான அனுமதிப் பத்திரம் வழங்கல், மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து அனுமதி வழங்கல் என பல மக்கள் நலன் சார் தேவைகளுக்காக  இரவு பகலாக செயற்பட்டு வருகின்றனர். 

இவ் விசேட குழுவின் இணைப்பாளராக உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜெளபர்,மற்றும் சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ

ஆர் சாலீஹ் ,நிர்வாக உத்தியோகத்தர் எம் என்.எம் ரம்சான்,கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஐ.எம் முகர்ரப்,கிராம சேவை நிர்வாக உத்தியோகத்தர் யூ.எல்.பதுரூத்தீன்,அபிவிருத்தி ஒருங்கிணைப்பாளர் கே.எல் யாஸீன் பாவா,பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர் எம்.எம்.ஹசன்,அபிவிருத்தி உத்தியோகத்தர்களான எம்.எஸ் ரியாஸ்,எஸ்.எம் அர்சாத்,கணனி உத்தியோகத்தர் எஸ்.எம் ஜிஹான்,காரியாலய உத்தியோகத்தர் என் பத்மபிரியன் ஆகியோர் திறன் பட செயற்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe