Ads Area

கல்முனையில் முறைகேடாக அகற்றப்படும் மனித கழிவுகள் : நீதி கேட்டு வீதிக்கு இறங்கிய ராஜனும், சிவலிங்கமும் !!

நூருல் ஹுதா உமர் 

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் அகற்றப்படும் மனிதக்கழிவுகளை முறைகேடாக அகற்றுவதன் மூலம் பொதுமக்களும், விவசாயிகளும், மீனவர்களும் பாதிப்பதாக தெரிவித்து கல்முனை மாநகர சபை முன்றலில் இன்று காலை கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான கந்தசாமி சிவலிங்கம் மற்றும் சந்திரசேகரம் ராஜன் ஆகியோர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டனர். 

எவ்வித முறையான வழிமுறைகளுமின்றி மனித கழிவுகளை நீர்நிலைகளில் கொட்டுவதன் மூலம் பொதுமக்கள் சுகாதார ரீதியாக வெகுவாக பாதிக்கப்படுவதாகவும், அந்த கழிவுகளை மீன்கள் உண்பதனால் மீன் சாப்பிட முடியாத நிலை தோன்றியுள்ளதாகவும் இங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மாநகர சபை உறுப்பினர்களான க.சிவலிங்கம் மற்றும் ச.ராஜன் ஆகியோர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர். மேலும் இங்கு கருத்து வெளியிட்ட அவர்கள், 

கல்முனை மாநகர சபை முதல்வரை இது தொடர்பில் பேச பலதடவைகள் முயற்சித்தும் பயனளிக்கவில்லை என்றும், தங்களை புறக்கணிக்கும் விதமாகவே அவரின் செயற்பாடுகள் அமைந்துள்ளதாகவும் தெரிவித்தனர். இது இனவாத, பிரதேச வாத ரீதியாக பார்க்கும் விடயமல்ல. இது மக்களின் பொதுவான பிரச்சினை. விவசாயிகள் எங்களுக்கு முன்வைத்த தகவலையடுத்ததே நாங்கள் இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளோம். 

நாடு போக்குவரத்து முடக்கத்தில் இருக்கும் இந்த காலத்தில் இவ்வாறு மனித மாண்புக்கு பொருத்தமில்லாது செய்யப்படும் செயலினால் கல்முனை நகரில் கொட்டப்படும் இந்த இடத்துக்கு அருகில் உள்ள கல்முனை மாநகர சபை, பொது நூலகம், பஸ்தரிப்பு நிலையம், பொலிஸ், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை என்பன உள்ளது இதில் ஏறத்தாழ 200க்கு மேற்பட்டோர் பணியாற்றுகிறார்கள். இவர்கள் உடன்பட பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.இது தொடர்பில் உரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மேலும் கேட்டுக்கொண்டார்கள்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe