வி.ரி.சகாதேவராஜா-
வெளியான க.பொ.த (உ.த) பரீட்சை - 2020 பெறுபேறுகளின்படி சம்மாந்துறை வலயத்தில் 25 க்கு மேற்பட்ட மாணவர்கள் 3ஏ சித்திபெற்று சிறப்பான சாதனை படைத்துள்ளனர்.
சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியில் பொறியியல் துறைக்கு 13 மாணவரும் மருத்துவத் துறைக்கு 09 மாணவரும் பொறி. தொழில்நுட்பத்துறைக்கு 13 மாணவரும் உயர்தொழில்நுட்பத்துறைக்க 06 மாணவரும் முகாமைத்துவத்துறைக்கு 02 மாணவரும் கலைத்துறைக்கு 03 மாணவரும் தெரிவாகியுள்ளனர்.
சம்மாந்துறை அல்மர்ஜான் மகளிர் தேசிய கல்லூரியில் உயிரியல் துறைக்கு 04 மாணவரும் பொறி. தொழில்நுட்பத்துறைக்கு 06 மாணவரும் முகாமைத்துவத்துறைக்கு 04 மாணவரும் 4 கலைத்துறைக்கு 06 மாணவரும் தெரிவாகியுள்ளனர்.
இதேவேளை வலயத்துக்குட்பட்ட இறக்காமம் கோட்டத்தில் இறக்காமம் தேசிய கல்லூரியில் 3 மாணவர் பொறியியில்துறைக்கும் 1 மாணவர் மருத்துவத்துறைக்கும் தெரிவாவதற்கான பெறுபேறு கிடைக்கப்பெற்றுள்ளது.
இறக்காமம் வரலாற்றில் முதல் முறையாக அஸ்ரப் மத்திய கல்லூரியில் கற்று 3ஏ பெறுபேறு பெற்று பொறியியல் துறைக்கு தெரிவு செய்யப்பட்டு சாதனை படைத்துள்ளார் ஹாதி அஹமட் என்ற மாணவன்.
இதேவேளை பின்தங்கிய நாவிதன்வெளிக்கோட்டத்தில் 3மாணவர்கள் 3ஏ சித்தி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
நாவிதன்வெளி அன்னமலை மகாவித்தியாலயத்தில் செல்வி இராசரெத்தினம் லிவோஜினி என்ற மாணவி கலைத்துறையில் 3ஏ பெற்றுள்ளார்.மேலும் 5மாணவர்கள் பல்கலைக்குத் தெரிவாகும் வயாப்பு இருப்பதாக அதிபர் எஸ்.பாலசிங்கன் தெரிவித்தார்.
வேப்பையடி கலைமகள்மகா வித்தியாலய வரலாற்றில் முதன் முறையாக உயர்தரப் பரீட்சைக்குகலைப்பிரிவில்தோற்றி 3ஏ சிவநாயகம் தர்ஷிகா எனும் மாணவி பெற்றுள்ளார்.
சொறிக்கல்முனை ஹொலிகுறோஸ் மகாவித்தியாலய மாணவன் எஸ்.அனோஜன் பாடசாலை வரலாற்றில்முதல்தடவையாக 3ஏ பெற்றுச்சாதனை படைத்துள்ளார்.