கொரோனா அச்சுறுத்தலை தடுக்கும் வகையில் பயணத் தடையானது நேற்று (25) காலை முதல் அகற்றப்பட்ட போதிலும், கொரோனா செயலணி விடுத்துள்ள வியாபார அறிவுறுத்தல்களை சம்மாந்துறை பிரதேசத்தில் மீறுவோரை கண்டறிய சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எம்.முஹம்மட் நௌஷாட் அவர்களின் பணிப்புரைக்கமைவாக விசேட குழுவினர் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட் தலைமையிலான வருமான பரிசோதகர் மற்றும் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட குழுவினர் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்ட வியாபாரிகளை கண்காணிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளி போன்ற சுகாதார நடைமுறைகளை பின்பற்றாமல் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்ட வியாபாரிகள் மற்றும் பொருட்களைக் கொள்வனவு செய்யவருகின்ற பொது மக்கள் சுகாதார நடைமுறையினை மீறுவோர் கண்டறிந்து சிலர் கடுமையாக எச்சரிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர்.