சம்மாந்துறை அன்சார்.
குவைத்தில் இரு வேறு பிரதேசங்களில் 12 மணி நேரத்திற்கு இடையில் இரு இந்தியர்கள் தற்கொலை செய்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக குவைத் செய்திகள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் குவைத் அல்-அன்பா (Al Anba) பத்திரிகை செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தற்கொலை செய்து கொண்ட முதலாம் நபர் குவைத்தின் பர்வானியா (Farwaniya) வில் உள்ள கைத்தன் (Khaitan) பிரதேசத்தில் குடும்பத் தகராறு காரணமாக தற்கொலை செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.
தனது பணியாளரை இரண்டு நாட்களாக தொடர்பும் கொள்ள முடியவில்லை அவருக்கு பல தடவைகள் அழைப்பை ஏற்படுத்தியும் பதில் ஏதும் வராமையினால் சந்தேகமடைந்து அவரது இருப்பிடத்தை (Room) பார்த்த போது அவர் துாக்கில் தொங்கிய நிலையிலிருந்ததாக தற்கொலை செய்து கொண்டவரின் முதலாளி (கபீல்) தெரிவித்துள்ளார்.
இரண்டாவது தற்கொலைச் சம்பவமாக 50 வயது மதிக்கத் தக்க மற்றுமொரு இந்தியரும் தனது பணியிடத்தில் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. இரு தற்கொலைச் சம்பவங்களும் 12 மணி நேரத்திற்கு இடைப்பட்ட நேரத்தில் இடம் பெற்றுள்ளது.
செய்தி மூலம் - https://gulfnews.com