பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர முகக் கவசம் அணியாமல் பொது நிகழ்வில் கலந்து கொண்டமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்து.
இலங்கை பொலிஸ் விசேட அதிரடிப்படைக்கு விசேட பிரிவு ஒன்றை அமைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் முகக் கவசம் அணியாமல் இருந்துள்ளார்.
இந்நிலையில் இது தொடர்பான புகைப்படங்கள் பேஸ்புக்கில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளளது.
இது தொடர்பில் மக்கள் விமர்சித்த நிலையில் அமைச்சரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
அதில் அரச நிகழ்வுகள் நடத்த தடை விதிக்கப்பட்டிருக்ககும் நிலையில் குறித்த நிகழ்வு எவ்வாறு ஏற்பாடு செய்யப்பட்டது?
முகக் கவசம் அணியாத மக்களை பொலிஸார் தூக்கி சென்று வழக்கு தாக்கல் செய்யும் போது அமைச்சர் இவ்வாறு சட்டத்தை மீறி செயற்படுவது எவ்வாறு? என மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.