சம்மாந்துறை அன்சார்.
சவுதியில் பொது மற்றும் தனியார் துறைகளுக்கு பொருந்தும் ரமலான் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அரசு துறையினருக்கு இன்றிலிருந்து (Thursday, 6th May, 2021) எதிர் வரும் மே 17 வரை (Monday, 17th May, 2021) விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் தனியார் துறையினருக்கு எதிர் வரும் மே 11 (Tuesday, 11th May, 2021) முதல் 4 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இருந்த போதும் ஒவ்வொரு நிறுவனங்களுக்கிடையில் அவர்களின் தனிப்பட்ட முடிவுகளின் படி விடுமுறை நாட்கள் மாற்றமடையலாம்.