(வி.ரி.சகாதேவராஜா)
சமகால கொரோனா தாக்கத்தையடுத்து அம்பாறை மாவட்டத்திலுள்ள மக்கள் வங்கிக் கிளைகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சேவைகளை மக்களுக்கு வழங்கி வருகிறது.
வாரத்தில் ஒரு கிளை இரு நாட்கள் அல்லது 3 நாட்கள் மாத்திரமே திறந்திருக்கும். குறிப்பாக சில கிளைகள் சில நாட்களில் மாத்திரமே திறந்திருக்கும். காலை 8.30மணிமுதல் பகல்11.45மணிவரை திறந்திருக்கும்.
எதிர்வரும் 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை இந்நடைமுறை அமுலில் இருக்குமென பிராந்திய முகாமையாளர் அறிவித்துள்ளார்.
இன்று (10) பென்சன் தினமாகையால் உகன காரைதீவு கல்முனை போன்ற கிளைகள் திறந்திருக்கும். நாளை மறுதினம் (11) வெள்ளிக்கிழமை அம்பாறை மஹாஓய சாய்ந்ததமருது அட்டாளைச்சேனை ஆகிய கிளைகள் மாத்திரமே திறந்திருக்கும்.
இதேவேளை இலங்கை வங்கியைப் பொறுத்தவரையில் அம்பாறை மற்றும் அக்கரைப் பற்றுக்கிகைள் மாத்திரமே இயங்கிவருகின்றன. ஏனைய கிளைகள் பூட்டப்பட்டுள்ளன.அதேபோல் தனியார் வங்கிகளும் பூட்டப்பட்டுள்ளன.
இதனை அனுசரித்து இன்றைய கொரொனா காலகட்டத்தில் வாடிக்கையாளர்கள் நடக்கவேண்டிய நிலையிலுள்ளனர்.