தமிழில் - சம்மாந்துறை அன்சார்.
சவுதி அரேபியாவிலிருந்து ஒருவர் எக்சிட் (Final Exit) செல்வதாக இருந்தால் அவரின் பெயரில் எந்தவிதமான நிலுவைக் (pending payment) கட்டணங்களும் இருத்தல் கூடாது, அவரால் செலுத்தப்பட வேண்டிய அனைத்துத் தொகைகளும் செலுத்தப்பட்ட பின்னரே அவருக்கான எக்சிட் விசாக்கள் வழங்கப்படும் என சவுதி அரேபிய ஜவசாத் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சவுதி அரேபியாவிலிருந்து ஒருவர் முற்றாக வெளியேற வேண்டுமாக இருந்தால் (Final Exit) அவரின் பெயரில் எந்த வித வாகனப் பதிவுகளோ, செலுத்தப்படாத போக்குவரத்து மீதி மீறல்களோ அல்லது ஏனைய அபராதங்களோ, செலுத்தப்படாத இணைய கட்டணங்களோ, செலுத்தப்படாத தொலைபேசி பில்களோ மற்றும் எதுவித பாரிய குற்றச் செயல்களோ இருத்தல் கூடாது அவ்வாறு இருக்கும் பட்சத்தில் அவருக்கு பைனல் எக்சிட் (Final Exit) விசா வழங்கப்பட மாட்டாது. மேற்குறித்த நிலுவையில் உள்ள தொகைகளை அவர் செலுத்திய பின்னரே அவருக்கு எக்சிட் விசாக்கள் வழங்கப்படும்.
நிலுவைத் தொகைகளை செலுத்தாது எவரேனும் பைனல் எக்சிட் (Final Exit) விசாக்களைப் பெற்றிருந்தால் கூட அவர்களால் விமானநிலையத்திலிருந்து வெளியேற முடியாது, செலுத்தப்படாத கட்டணங்களை அவர் செலுத்திய பின்னரே வெளியேற்றப்படுவார்.
அதே போல் ஒருவருக்கு பைனல் எக்சிட் (Final Exit) விசா வழங்கப்பட்ட பின்னர் அவர் 60 நாட்களுக்குல் சவுதி அரேபியாவை விட்டு வெளியேற வேண்டும் அவ்வாறு வெளியேறாது விட்டால் அவரது விசா செல்லுபடியற்றதாகி விடும் பின்னர் அவர் அதற்கான அபராதத் தொகையினை செலுத்திய பின்னரே மீண்டும் பைனல் எக்சிட் (Final Exit) விசாவினைப் பெற்றுக் கொள்ள முடியும்.
மேலும் பைனல் எக்சிட் (Final Exit) விசாவுக்கு எந்த வித கட்டணங்களும் அறவிடப்படுவதில்லை பைனல் எக்சிட் (Final Exit) விசா அடித்த பின்னர் ஒருவர் குறிப்பிட்ட காலத்திற்குள் சவுதியை விட்டு வெளியேறாவிட்டால் 100 ரியால்களின் ரத்து கட்டணத்தை செலுத்திய பின்னர் இந்த விசாவிற்கான விண்ணப்பத்தை அப்சர் அல்லது முகீம் இயங்குதளங்கள் வழியாக ரத்து செய்யலாம். பைனல் எக்சிட் (Final Exit) விசாவை பெற்றுக் கொள்ள பாஸ்போட்கள் காலாவதியாகி இருத்தல் கூடாது, குறைந்தது 60 நாட்களாவது செல்லுபடியானதாக இருத்தல் வேண்டும்.
பைனல் எக்சிட் (Final Exit) இல் சவுதி அரேபியாவை விட்டு வெளியேறியவர்கள் சவுதிக்கு மீண்டும் வர விரும்பினால் அவர்கள் புதிய விசா பெற்றுக் கொண்டு உடனே திரும்ப வர முடியும். இறுதி வெளியேறும் விசா வழங்கப்பட்ட பின்னர் தொழிலாளி தப்பித்ததாக குற்றம் சாட்டி அதிகாரிகளிடம் புகார் அளிக்க ஒரு முதலாளிக்கு உரிமை இல்லை.
செய்தி மூலம் - https://www.saudi-expatriates.com