தகவல் - சம்மாந்துறை அன்சார்.
இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையேயான பயணிகள் விமானப் போக்குவரத்து தடை எதிர்வரும் ஜூலை 6 ஆம் தேதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த விமான நிறுவனமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் இதனைத் தெரிவித்துள்ளது. மேற்கண்ட தேதிகளில் விமான டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் எதிர்வரும் காலத்திற்கு ஏற்றவாறு இந்த டிக்கெட்டை முன்பதிவு தேதியை மாற்றிக்கொள்ளுமாறும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் குடிமக்கள் தவிர்ந்த அனைவருக்கும் இத் தடை பொருந்தும் எனவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் அமீரகத்திற்கு இடையேயான பயணத் தடைகள் பல தடவைகள் அமுல்படுத்தப்பட்டு, நீடிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் எதிர்வரும் ஜூலை 6 ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கதாகும்.