சவுதியில் கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்கள் ஒரு வருடம் கழித்து மரணமடையலாம் என வெளியான தகவல்கள் முற்றிலும் பொய்யானதாகும் என சவுதி அரேபிய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கொவிட் தடுப்பூசிகள் மிகவும் பாதுகாப்பானது எனவும், இது விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது எனவும் இது தனிநபர் மற்றும் சமூகம் மீதான தொற்று நோயினை கட்டுப்படுத்தவல்ல மிக முக்கியமான ஆயுதமாகும் எனவும் சவுதி சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சவுதி அரேபியாவின் உத்தியோகபூர்வ ஆதாரங்களில் இருந்து தகவல்களைப் பெற்றுக் கொள்ளும் படியும், வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் அமைச்சகம் தொடர்ந்து பொதுமக்களை கேட்டுக்கொள்கிறது.
சவுதி சுகாதார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் டாக்டர் முஹம்மது அல்-அப்துல் அலி இது தொடர்பில் கூறுகையில், சவுதி நாட்டவர்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் வைரஸ் குறித்த விழிப்புணர்வைக் பெற்றுவருகின்றனர் இதனால் தடுப்பூசிகளுக்கான தேவை அதிகரித்து வருகிறது என்றார்.
அதே போல் சவுதி அரேபியாவிற்கு வெளியே COVID-19 தடுப்பூசி பெற்று சவுதிக்கு திரும்புவோர் தவக்கல்னா பயன்பாடு உட்பட சவுதி அமைப்புகளில் தங்கள் தகவல்களை கீழே தரப்பட்டுள்ள லிங்கின் ஊடாக பதிவு செய்யலாம் என்றும் அமைச்சகம் அறிவித்தது. லிங் - https://eservices.moh.gov.sa/CoronaVaccineRegistration/
தகவல் - சம்மாந்துறை அன்சார்.
செய்தி மூலம் - https://www.arabnews.com/node/1872286/saudi-arabia