Ads Area

கொரோனாவில் உணவின்றிப் பாதிக்கப்பட்ட யாசகரின் துயரை துடைத்த ஊடகவியலாளர் குழு.

பாறுக் ஷிஹான் (ෆාරුක් සිහාන්)

கொரோனா அனர்த்தத்த பயணத்தடை கட்டுப்பாட்டினால் பாதிக்கப்பட்டுள்ள  யாசகர்களுக்கு ஊடகவியலார்களின் வேண்டுகோளிற்கிணங்க உணவு வழங்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டத்தின் கல்முனைப் பிராந்தியத்தில் பொது இடங்களில் தற்போது கொரோனா தொற்றுக்காரணமாக பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில் இங்குள்ள யாசகர்கள் பலர் உணவின்றி பெரும் சிரமங்களுக்கள்ளாகி வருகின்றனர்.

திங்கட்கிழமை (31) மாலை செய்தி சேகரிப்பில் ஈடுபட்ட ஊடகவியலாளர்களை அணுகிய யாசகர்கள் உணவின்றி சிரமப்படுவதாகத் தெரிவித்தனர். 

இதனைக் கருத்திற்கொண்டு அம்பாறை மாவட்ட  ஊடகவியலார்களின் வேண்டுகோளுக்கிணங்க  கல்முனை மாநகர சபையின் உறுப்பினரும் சட்டத்தரணியுமான அன்பு முகைடீன் ரோசன்அக்தர் பயணத்தடையினால் நிர்க்கதியான     இப்பகுதியிலுள்ள 20 யாசகர்களுக்கு  உணவுகளை வழங்கி வைத்தார்.

இந்த மனிதாபிமானப்பணியினை தனது சபை அமர்வில் வழங்கப்படும் மாதாந்தக் கொடுப்பனவில் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe