சம்மாந்துறை அன்சார்.
செய்யாத குற்றம் ஒன்றுக்காக தவறுதலாக சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட சவுதியைச் சேர்ந்த ஒருவருக்கு இழப்பீடாக 8 இலட்சம் சவுதி ரியால்கள் வழங்கப்பட்டுள்ளது.
சவுதி அரேபியா ஜித்தாவில் சவுதியைச் சேர்ந்த ஒருவர் குற்றச் செயல் ஒன்றின் காரணமாக கைது செய்யப்பட்டு அவர் மீது கிரிமினல் வழக்கு தொடுக்கப்பட்டு 19 மாதங்கள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டிருந்தது.
பின்னர் அவர் நிரபராதி என்றும் குற்றச் சம்பவத்தோடு தொடர்பு படாதவர் என தெரிய வந்த நிலையில் 19 மாதங்களின் பின் விடுதலை செய்யப்பட்டார். குறித்த அந்த நபர் தனது தவறான சிறைவாசம் காரணமாக தனக்கு ஏற்பட்ட தீங்கிற்கு இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கின் அடிப்படையில் அவருக்கு தற்போது 8 இலட்சம் சவுதி ரியால்கள் இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது.
அண்மையில் சவுதி அரேபியா மனித உரிமைகளை பேணுவதன் அடிப்படைடயில் அதன் நீதி அமைப்பில் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தியுள்ளமை குறிப்பிடத் தக்கதாகும்.
செய்தி மூலம் - https://gulfnews.com