பாலியல் உறவுக்கு மறுத்த தனது மனைவியை கொலை செய்த குற்றச்சாட்டில் நபர் ஒருவர் எகிப்திய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நபர் தனது மனைவியை கொலை செய்துவிட்டு அவரின் உடலை தன்ணீர் தாங்கியில் எறிந்தார் என குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.
இந்நபர் பொலிஸாரிடம் அளித்த வாக்குமூலத்தின்படி, இந் நபர் சிறு வயதிலிருந்து அவரின் இனப்பெருக்க உறுப்புகளில் நோயொன்று ஏற்பட்டிருந்தது. இதற்காக சத்திரசிகிச்சை செய்யப்பட வேண்டியிருந்தது.
இந்நிலையில் அண்மையில் மேற்படி நபர் பாலியல் உறவுக்கு அழைத்தபோது, அவரின் மனைவி மறுத்தார்.
இதனால், இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு அது கைகலப்பாக மாறியது. இதன்போது, மேற்படி நபர் தனது மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.
பின்னர் மனைவியின் சடலத்தை அயலவரின் தண்ணீர் தாங்கியில் எறிந்துவிட்டு, அவர் காணாமல் போய்விட்டார் என அப்பெண்ணின் குடும்பத்தினரிடமும் பொலிஸாரிடமும் தெரிவித்துள்ளார்.
எனினும், பொலிஸாரின் விசாரணையின்போது தனது குற்றங்களை மேற்படி நபர் ஒப்புக்கொண்டார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Source - https://gulfnews.com