தகவல் - சம்மாந்துறை அன்சார்.
புனித மக்கா கஃபத்துல்லாவில் கொரோனா தொற்று நோய்த் தடுப்புக் குழுவில் 10 ரோபோக்கள் இணைக்கப்பட்டுள்ளது. புனித மக்கா பள்ளிவாசலில் கிருமிநாசினி தெளிப்பு நடவடிக்கை, மற்றும் கொரோனா தொற்றுக் கண்காணிப்பு நடவடிக்கை ஆகியவற்றிக்கு இவைகள் பயண்படுத்தப்படவுள்ளன.
ஒவ்வொரு ரோபோக்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் தொற்று நீக்கல் நடவடிக்கைகளை பகுப்பாய்வு செய்யும் படியும், கொரோனா தொற்று பரவலை தடுக்கும் படியும் வடிவமைக்கப்பட்டுள்ளதோடு எந்தவித மனிதத் தலையீடும் இல்லாமல் ஐந்து முதல் எட்டு மணி நேரம் வரை வேலை செய்யக் கூடியதாகவும் உருவாக்கப்பட்டுள்ளது.
செய்தி மூலம் - https://www.arabnews.com