Ads Area

250 வருடங்கள் பழமையான மயான மதிலைப் புனரமைக்க நடவடிக்கை.

பாறுக் ஷிஹான் (ෆාරුක් සිහාන්)

நீண்ட காலமாக சிதைந்திருந்த கல்முனை பொது மயான மதில் புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பிராந்தியத்திலுள்ள தமிழ் இளைஞர் ஒன்றியம் விடுத்த கோரிக்கைக்கமைய சுமார் 10 இலட்சம் ரூபா நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஒன்றியத்தின் தலைவர் ஏ.நிமலன் தெரிவித்தார்.

குறித்த கல்முனை பொது மயான மதிலை புனரமைப்புச் செய்வதற்கான கண்காணிப்பு விஜயமொன்றினை (18) கிழக்கு மாகாண கிராமிய அபிவிருத்தி மாகாண பணிப்பாளர் நா.தனஞ்ஜெயன் மற்றும் தமிழ் இளைஞர் ஒன்றியப் பிரதிநிதிகள் இணைந்து மேற்கொண்டு பார்வையிட்டனர்.

குறித்த மதிலானது, 250 வருடங்களுக்கு மேற்பட்ட பழமையானதாகக் காணப்பட்டதுடன், கடந்த 12.02.2021ம் திகதி அன்று இடம்பெற்ற  ஒன்றியத்தின் கூட்டத்தில் மேற்கொண்ட தீர்மானத்தின்படி கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தி மாகாணப் பணிப்பாளர் நா.தனஞ்ஜெயனிடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கமைவாக இத்திட்டம் செயற்படுத்தப்படவுள்ளதாகவும், இத்திட்டம் நிறைவேற ஆதரவளித்த கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரதேச செயலாளர்  ஜெ.அதிசயராஜ், பொறியியலாளர் கென்றி அமல்ராஜ், துறைசார் திணைக்கள உத்தியொகத்தர்களுக்கும் நன்றிகளைய் தெரிவிப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.






Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe