Ads Area

கல்முனையில் நவீன பஸ் தரிப்பிடம் : ஹரீஸ் எம்பி பிரதமரிடம் வேண்டுகோள்.

பாறுக் ஷிஹான் (ෆාරුක් සිහාන්)

கல்முனையில் நவீன பஸ் தரிப்பிடம் அமைப்பதற்காக பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க கல்முனை பஸ் நிலையம் சகல வசதிகளுடன் நவீன மயப்படுத்தப்படவுள்ளது. 

இதற்கிணங்க கல்முனை பஸ் நிலையத்தினை  பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ், நேரடியாகச் சென்று பார்வையிட்டார்.

இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபை மேயர் சட்டத்தரணி ஏ.எம் ரக்கீப், கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாகத் அலி, கல்முனை மாநகர  சபை பொறியியலாளர் எம்.ஜெளஸி, பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்புச் செயலாளர் நெளபர் ஏ.பாவா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும், இச்செயற்றிட்டத்தை மதிப்பீடு செய்வதற்காக பிரமரின் பணிப்புரைக்கமைவாக கடந்த வாரம் நகர அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் வருகை தந்து மதிப்பீடு அறிக்கைகளை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe