தகவல் - சம்மாந்துறை அன்சார்.
COVID-19 க்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுக் கொண்ட பயணிகள் சவுதி அரேபியாவுக்கு வந்தவுடன் அவர்கள் தனிமைப்படுத்தலில் இருக்கத் தேவையில்லை என்று சவுதி அரேபிய விமானப் போக்குவரத்து ஆணையம் (GACA) தெரிவித்துள்ளது.
இவ்வாறு சவுதிக்கு வருவோர் தங்களது சொந்த நாட்டில் அதிகாரிகளால் சான்றளிக்கப்பட்ட முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்ட சான்றிதழ்களை சமர்ப்பிப்பது கட்டாயமாகும்
தடுப்பூசி போடாத வெளிநாட்டு பயணிகளுக்கு சவுதி அரேபிய விமானப் போக்குவரத்து ஆணையம் (GACA) ஏழு நாள் தனிமைப்படுத்தலை நிர்ணயித்துள்ளமை குறிப்பிடத் தக்கதாகும்.
சவுதி அரேபியாவால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகள்:
01. Pfizer-BioNTech
02. Moderna
03. Oxford-AstraZeneca
04. Johnson & Johnson
Source - https://www.riyadhconnect.com