சம்மாந்துறை அன்சார்.
இலங்கையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த 21ம் திகதி முதல் 31ம் திகதி வரை விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது.
10 நாட்களாக மூடப்பட்டிருந்த உள்ளுர் மற்றும் சர்வதேச விமான நிலையங்கள் இன்று முதல் மீண்டும் திறக்கப்பட்டதனை அடுத்து கத்தார் எயார்லைன்ஸ்சுக்கு சொந்தமான முதல் விமானம் ஒன்று கத்தார் நாட்டிலிருந்து 53 பயணிகளுடன் அதிகாலை 2.15 க்கு இலங்கை வந்தடைந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து சிரிலங்கன் எயார்லைன்சுக்குச் சொந்தமான விமானம் ஒன்றும் 116 பயணிகளுடன் அதிகாலை 4.05 க்கு இலங்கை வந்தடைந்துள்ளதாக இலங்கை விமானநிலையப் பொறுப்பதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வருகை தந்துள்ள அனைத்துப் பயணிகளும் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி மூலம் -http://www.dailymirror.lk/