Ads Area

தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த 37 வயது பெண் ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளை பெற்றெடுத்து உலக சாதனை படைத்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த 37 வயது பெண் ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளை பெற்றெடுத்து உலக சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் மாலி நாட்டு பெண் ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளை பெற்றெடுத்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.

ஆப்ரிக்க நாடான தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த கோஷியாமி தமாரா சித்தோல் என்ற 37 வயது பெண்ணுக்கு ஏற்கனவே இரட்டை குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் மீண்டும் கர்ப்பம் தரித்திருந்தார்.

7-ம் தேதி பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து பிரிட்டோரியா நகரி்ல் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று அவருக்கு சிசேரியன் மூலம் 7 ஆண் குழந்தைகள், 3 பெண் குழந்தைகள் என 10 குழந்தைகள் பிறந்தன. தாயும், 10 குழந்தைகளும் நலமாக உள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு முன்னர் மாலி நாட்டைச் ஹலிமா சிசி, என்ற 25 வயது இளம்பெண் கடந்த மே மாதம் ஒரே பிரசவத்தில் ஏழு குழந்தைகளை பெற்றெடுத்தார். இது உலக சாதனையாக கருதப்பட்டது. தற்போது தென்னாப்பிரிக்க பெண் 10 குழந்தைகளை பெற்றெடுத்து ஹலிமா சிசியின் சாதனையை முறியடித்துள்ளார். இதுதான் இப்போது உலக சாதனையாக கருதப்படுகிறது.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe