சம்மாந்துறை அன்சார்.
சவுதி அரேபியாவில் வயதுக்கு வந்த பெண்கள், விவாகரத்துப் பெற்றவர்கள், விதவைகள் ஆகியோர் தங்களது மஹ்ரமான (திருமணம் முடிக்க அனுமதிக்கப்படாத ஆண் பாதுகாவலர்கள்) உறவுகளின் துணையின்றி சுதந்திரமாக ஒரு வீட்டில் தனித்து வாழலாம் என்ற புதிய சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இந்தப் புதிய விதியானது ஒரு பெண்னுக்கு சுதந்திரம் அளிப்பதோடு அவர்கள் தங்களது தந்தை, சகோதரன் போன்ற ஆண் பாதுகாவலர்களின் அனுமதியின்றி தனித்து வாழவும் வழி செய்யவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஷரியா நீதிமன்ற நடைமுறைச் சட்டம் 169 வது பிரிவின் கீழ் வயது வந்த ஒரு பெண் அல்லது விவாகரத்து செய்யப்பட்ட அல்லது விதவை பெண் தனித்து வாழ முடியாது அவர்கள் தங்களது ஆண் பாதுகாவலரிடம் ஒப்படைக்கப்படுவார் என்று கூறிப்பிட்டிருந்தது. தற்போது இத்தகைய விதி மாற்றப்பட்டு அவர்கள் தங்களது தந்தை மற்றும் ஆண் பாதுகாவலர்களின் துணையின்றி தனித்து வாழலாம் என்ற புதிய விதி சேர்க்கப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவில் சட்டதிட்டங்களில் பல்வேறு சீர்திருத்தங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றமையும், பெண்களுக்கு சிறப்பான முன்னுரிமைகள், சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத் தக்கதாகும்.