Ads Area

விசிட் விசாக்களை work permit விசாக்களாக மாற்ற ஓமான் அரசு அனுமதி..!!

ஓமானிற்கு விசிட் மற்றும் டூரிஸ்ட் விசாவில் நுழையும் வெளிநாட்டவர்கள் இனி தங்கள் விசாக்களை வேலை அனுமதிகளாக மாற்றலாம் என்று ராயல் ஓமான் காவல்துறை (ROP) அறிவித்துள்ளது.

சில நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டால், மாணவர் விசாக்கள் உள்ளிட்ட பிற விசா உள்ளவர்களுக்கும் இந்த விதி பொருந்தும் என கூறப்பட்டுள்ளது.

பின்வரும் விசாக்கள், ஓமானின் வெளிநாட்டினரின் குடியிருப்பு சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள படி, பணி விசா அல்லது தற்காலிக பணி விசாவாக மாற்றப்படலாம் என்று கூறப்பட்டுள்ளது.

சில நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டால், மாணவர் விசாக்கள் உள்ளிட்ட பிற விசா உள்ளவர்களுக்கும் இந்த விதி பொருந்தும் என கூறப்பட்டுள்ளது.

01. GCC நாடுகளின் குடியிருப்பாளர்களுக்கு வழங்கப்பட்ட விசிட் விசா.

02. நாட்டில் உள்ள உறவினர்கள் மற்றும் நண்பர்களைச் சந்திக்க வழங்கப்பட்ட விசிட் விசா.

03. ஒற்றை நுழைவு டூரிஸ்ட் விசாக்கள் (10 நாட்கள் அல்லது ஒரு மாதம் வரை செல்லுபடியாக கூடிய விசாக்கள்)

04. ஒற்றை மற்றும் பல நுழைவு பிஸினஸ் விசாக்கள்.

05. எக்ஸ்பிரஸ் விசாக்கள்.

06. இன்வெஸ்டர் விசாக்கள்.

07. மாணவர் விசாக்கள்.

08. கப்பலில் பணியாற்றும் மாலுமிகளுக்கு அல்லது பயணக் கப்பல்களில் பயணிப்பவர்களுக்கு வழங்கப்படும் விசாக்கள்.

09. குடியிருப்பு கட்டிடங்களின் உரிமையாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கான விசாக்கள்.

செய்தி மூலம் - https://www.khaleejtamil.com



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe