(காரைதீவு நிருபர் வி.ரி.சகாதேவராஜா)
அம்பாறை மாவட்ட கிழக்கு மாகாண விவசாய திணைக்களத்தின் கீழ் சௌபாக்யா நிகழ்ச்சி திட்டத்தின் அம்சமாகவும், ஜனாதிபதி யின் வழிகாட்டலுக்கு அமைவாகவும், சேதன விவசாய ஊக்குவிப்பு நிகழ்ச்சிகள் அம்பாறை மாவட்டத்தில் பரவலாக இடம்பெற்றுவருகிறது.
அந்த வகையில் சம்மாந்துறை கிழக்கு விவசாய போதனாசிரியர் பிரிவிற்குட்பட்ட கல்லரிச்சல்- 02 கிராம சேவகர் பிரிவில் சேதன பசளை உற்பத்தி தொடர்பான செய்து காட்டல் பயிற்சி வகுப்பானது ,விவசாய போதனாசிரியர் திருமதி. சமேதா கீர்த்தன் தலைமையில் தொழில்நுட்ப உதவியாளர் இ.ரஜிரேகா ஒழுங்கமைப்பில் நேற்று நடைபெற்றது.
இந் நிகழ்வில், சம்மாந்துறை வலய உதவி விவசாய பணிப்பாளர் எ. எல். எம். சல்மான் சேதனப்பசளை உற்பத்தி தொடர்பாக விளக்கமளித்ததுடன் ,அப்பிரதேசத்திற்கான கிராம சேவகர் மற்றும் பல விவசாயிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.