Ads Area

றிசாட் பதியூதீனை முடிக்கப்போகிறார்கள்; அடுத்தது? அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவராகிறாரா முசாரப்?

ஏ.எல். தவம் - முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்.

சகோ. றிசாட் பதியூதீனை அழித்து; ACMCக்கு முசரப் எம்.பியை தலைவராக்கும் சதித்திட்டம் அரங்கேறுவதை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவராகிறாரா முசாரப்? என்ற தலைப்பிட்டு - கடந்த வருடம் டிசம்பர் மாதம் 16 ஆம் திகதி எனது முகநூலில் எழுதியிருந்தேன்.

ஆனால், அதனை ACMCயினர் நையாண்டி பண்ணினர். முசரப் எம்.பியை பத்தர மாற்று தங்கம் என அடித்துச் சொன்னர். யாரோ ஒருவர் - றிசாட் பதியூதீனோடு தடுப்புக்காவலிலிருந்து பாராளுமன்றத்திற்கு அழைத்து வரப்படும் போது - றிசாட் பதியூதீனோடு முசரப் எம்.பி நடந்துவரும் போட்டோ ஒன்றை பதிவேற்றி - தலைவரோடு  முசரப் எம்.பி கடும் நெருக்கம் என்பதாக பதிவேற்றியிருந்தார்.

பாவம் இவர்கள் இப்படி அப்புறாணிகளாக இருக்காங்களே என அன்று மனசு சொன்னது. இன்று நிஜத்தில் ஒவ்வொன்றாக அரங்கேறுகிறது. அதிகாரத்திலுள்ளோர் றிசாட் பதியூதீனை முடிப்பது என்ற முடிவோட களமிறங்கிவிட்டதாக படுகிறது. இப்போது ACMC கட்சியில் இருக்கும் ஒரே ஒரு எம்.பி முசரப் மாத்திரமே. அவர் மூச்சு பேச்சில்லாமல் அடங்கிவிட்டார். அதன் அர்த்தம் என்ன? 

“அறிவுடையோருக்கு இதில் அத்தாட்சியுண்டு”

றிசாட் பதியூதீனை அழித்த பின்னர் - அடுத்து கைவைக்க முனையப்போவது SLMCயின் தலைவர் சகோ. றஊப் ஹக்கீம் மீதுதான். இதற்கு SLMCயிலுள்ள 20க்கு கையுயர்த்திய எம்.பிக்களில் இருவர் உடந்தையாக இருப்பார்கள். 

அதற்கான நிகழ்ச்சி நிரலும் ஏலவே தயாராக இருந்தது. இதனை தலைவர் றஊப் ஹக்கீம் மிகத்தெளிவாக புரிந்திருந்தார். அதனால், அவர்கள் பெருமெடுப்பில் தன் மீதும் கட்சி மீதும் பாய்வதற்கான இடைவெளியை மூடினார். 

கட்சித் தலைமையின் எதிர்ப்பனை கவனத்தில் கொள்ளாமல் - 20க்கு கையுயர்த்த எம்.பிக்கள் தயாராவதாக இருந்தால் - இதன் பின்னணி என்ன? இதன் சூத்திரதாரி யார்? ஆபத்தை புரிந்துகொண்டார்.

20க்கு கையுயர்த்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாத காரணத்தால் - கட்சிக்குள்ளேயே தனக்கெதிரான பலமான எதிர்ப்பும் விமர்சனமும் இருந்தும் - 20க்கு கையுயர்த்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் நிறுத்தினார். மக்கள் 20க்கு கையுயர்த்தியவர்களின் துரோகத்தனத்தை விளங்கிக்கொள்ள #இடைவெளி #விட்டு  தந்திரோபாய பின்னகர்வினை #செய்தார்.

அல்லது, முதலில் றஊப் ஹக்கீமே முடிக்கப்பட்டிருப்பார். றிசாட் பதீயூதீன் பின்னர்தான். இருந்தாலும், இன்னும் SLMCயும் அதன் தலைவரும் Safe Zoneக்குள் இல்லை. எப்போது வேண்டுமானாலும் அவர்கள் பாயலாம். அதற்கு முழு அளவில் களமிறங்கி ஆதரவு செய்ய - குறித்த இரண்டு SLMC எம்.பிக்களும் இன்றும் On your markயில்தான் இருக்கிறார்கள். 

SLMC போராளிகள் எச்சரிக்கையாக இருங்கள்!..




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe