தகவல் - றுமைஸ்.
சம்மாந்துறையில் உள்ள பள்ளிவாசல்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட முறையான தொழுகையாளிகளான முதியோர்களுக்கு அவர்களை கௌரவப்படுத்தும் விதமாக ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு அவர்களுக்கு சாரன்கள் அன்பளிப்புச் செய்யும் நிகழ்வு அண்மையில் இடம் பெற்றது.
சம்மாந்துறை FORAS ( Frienship Organization for Rewarding Action Society Sammanthurai) அமைப்பினர் ஆசிய அபிவிருத்தி வங்கியில் திட்டப்பகுப்பாளராக கடமை புரியும் திரு. அஸ்மி யாசீன் அவர்களிடம் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க அஸ்மி யாசீன் அவர்கள் முதியோர்களுக்கான சாரன்களை வழங்க அவற்றினை FORAS அமைப்பினரிடம் கையளித்திருந்தார்கள்.
இவ் அமைப்பின் இணைத் தலைவர் திரு. அத்தார் அவர்களினால் இடம் பெற்ற இந் நிகழ்வில் அஸ்மி யாசீன் அவர்களும், முன்னாள் அம்பாறை மாவட்ட காணிப்பதிவாளர் எம்.ஏ. நஜீப் அவர்களும் FORAS அமைப்பின் அங்கத்தவர்களும் கலந்து கொண்டனர்.