சம்மாந்துறை அன்சார்.
2021 ஜூன் 17 முதல் ஜூலை 28 வரை குழந்தைகள் தொடர்பான மொத்தம் 17,629 ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன.
இலங்கையில் மடிக்கணினிகள், டெஸ்க்டாப், தொலைபேசிகள் வழியாக ஆபாச வீடியோக்கள் பதிவேற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாரளர் டி.ஐ.ஜி அஜித் ரோஹானா தெரிவித்தார்.
குழந்தைகள் தொடர்பான ஆபாச வீடியோக்கள், போட்டோக்கள், பொருட்கள் போன்றவற்றைக் கண்காணிக்க சிறப்பு பிரிவு ஒன்று நிறுவப்பட்டுள்ளதோடு இது காணாமல் போன மற்றும் சுரண்டப்பட்ட குழந்தைகளுக்கான தேசிய மையம் என இந்த பிரிவு பெயரும் இடப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் குழந்தைகள் தொடர்பான ஆபாச உள்ளடக்கங்களை இணையத்தில் இடுகையிடும் சந்தேக நபர்களைக் கண்டறிய நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது.
பொலிஸ் ஊடகப் பேச்சாரளர் டி.ஐ.ஜி அஜித் ரோஹானா கூறுகையில், இவ்வாறு குழந்தைகள் தொடர்பான ஆபாச வீடியோக்களைப் பதிவேற்றிய சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் மற்றும் சந்தேக நபர்களைக் கண்டுபிடித்து கைது செய்ய சிறப்பு பொலிஸ் குழு ஒன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகள் தொடர்பான ஆபாச வீடியோக்களை ஏனையோருக்கு பகிர்ந்த அல்லது அனுப்பிய நபர்களையும் இலங்கைப் பொலிஸ் கண்டுபிடிக்கும் என்றும் அவர் கூறினார்.
இது தொடர்பாக காவல்துறை குழந்தைகள் மற்றும் பெண்கள் பணியகம் மற்றும் குற்றப் புலனாய்வுத் துறையினர் கூட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தி மூலம் - https://www.newswire.lk