Ads Area

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் நான்கு முக்கிய பிரிவுகள் திறந்துவைக்கப்பட்டது !!

நூருல் ஹுதா உமர்

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன் கூடிய அதி தீவிர சிகிச்சை பிரிவு(ICU), விசேட வைத்திய நிபுணர்கள் ஓய்வறை(Consultant Longue), வைத்தியசாலை நூலகம்(Hospital Library) மற்றும் உடற்பயிற்சி சிகிச்சை பிரிவு (Physiotherapy unit) என்பன சனிக்கிழமை அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின்  வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஐ.எம்.ஜவாஹிர் தலைமையில் அக்கரைப்பற்று மாநகர முதல்வர் அதாஉல்லா அகமட் ஸகி அவர்களினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

தேசிய காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா அவர்களின் முழு முயற்சியினால் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையானது இப்பிராந்திய பொதுமக்களின்  சுகாதார, மருத்துவ,ஆரோக்கிய சேவைகளை சிறப்பாக நிறைவேற்றி வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த திறப்பு விழா சிறப்பு நிகழ்வில் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், வைத்தியசாலை நலன்விரும்பிகள், மற்றும் வைத்தியசாலை ஊழியர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.






Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe