Ads Area

அக்கரைப்பற்று பஸ் நிலையத்துக்கு அருகில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு.

 (வி.சுகிர்தகுமார் )

அக்கரைப்பற்று பஸ் நிலையத்துக்கு அருகில் இன்று காலை 60 வயதுடைய ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பண்டார விஜயதுங்க தெரிவித்தார்.

பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற பொலிசார் இன்று காலை சடலத்தை மீட்டதாகவும் கூறினார்.

சடலமாக மீட்கப்பட்டவர் பொத்துவில் ஜலால்தீன் சதுக்கம் பிரதேசத்தை சேர்ந்த 60 வயதுடைய கலந்தர் லெப்பை என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிசார் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

குறித்த நபரின் மரணத்துக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

Thanks - http://www.battinews.com/



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe