பாறுக் ஷிஹான்
கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாண்டிருப்பு தோம்புதோர் வீதியில் உள்ள வீடு ஒன்றில் இறந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் 45 வயதுடைய தர்மராசா திருச்செல்வம் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்திற்கு கல்முனை பொலிஸார் வருகைதந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.