தகவல் - சம்மாந்துறை அன்சார்.
ஓமானில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு நாளை வியாழன் முதல் மறு அறிவித்தல் வரும் வரை மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது. இதன் படி இரவு 10 மணியிலிருந்து அதிகாலை 4. மணி வரை அனைத்து வகையான இயக்கங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஓமான் அரசு அறிவித்துள்ளது.
சுமார் 4.5 மில்லியன் மக்கள் வாழும் ஓமானில் பல கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து ஜூன் நடுப்பகுதியில் இருந்து கொரோனா பாதிப்பு வீழ்ச்சியைக் கொண்டிருந்த நிலையில் தற்போது கொரோனா பாதிப்புக்கள் மீண்டும் உயரத் தொடங்கியுள்ளன.
இந் நிலையிலேயே இரவு நேர ஊரடங்கு உத்தரவினை ஓமான் அரசு மீண்டும் அமுல்படுத்தியுள்ளது.
ஓமனில் இதுவரை 295,535 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டும் 3,802 பேர் மரணித்தும் உள்ளனர்.