தகவல் - சம்மாந்துறை அன்சார்
இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷில் இருந்து ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு வரும் அனைத்து விமானங்களுக்கும் விதிக்கப்பட்ட தடையானது மீண்டும் ஆகஸ்ட் 7 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என எமிரேட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், கடந்த 14 நாட்களில் இந்த நாடுகள் வழியாக டிரான்சிட்டில் பயணித்த பயணிகள் வேறு எந்த இடத்திலிருந்தும் ஐக்கிய அரபு அமீரகத்திற்குள் நுழைய ஏற்றுக்கொள்ளப்பட மாட்டார்கள் என்றும் விமான நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
இருந்த போதும் ஐக்கிய அரபு அமீரக குடிமக்கள், கோல்டன் விசாக்கள் வைத்திருப்பவர்கள், அரசுப்பிரதிநிதிகள் உள்ளிட்டவர்களுக்கு இதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் அந் நிறுவனம் தெரிவித்துள்ளது.
செய்தி மூலம் - www.khaleejtimes.com