Ads Area

துபாய் - ஜெபல் அலி பிரதான துறைமுகத்தில் கப்பலில் பாரீய தீ.

துபாயின்  (Dubai) ரதான துறைமுகத்தில் கொள்கலன் கப்பல் ஒன்று இன்று (08) தீப்பற்றியுள்ளது. இத்தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக ஐக்கிய அரபு இராச்சிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜெபேல் அலி  (Jebel Ali) துறைமுகத்தில், வெடிப்புச் சம்பவமொன்றையடுத்து இக்கப்பல் தீப்பற்றியதாகவும், இச்சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இத்துறைமுகப் பகுதியில் வசிக்கும் மூவர் மேற்படி சம்பவத்தினால் தமது வீடுகளின் ஜன்னல்களும் கதவுகளும் அதிர்ந்ததாக தெரிவித்துள்ளனர்.

கப்பலில் இருந்த கொள்கலன் ஒன்றுக்குள் வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றதாக துபாய் ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.

தீப்பற்றக்கூடிய பொருட்கள் அடங்கிய 130 கொள்கலன்களைக் கொண்ட இக்கப்பலில் 14 ஊழியர்கள் இருந்தனர் எனவும், அந்த அலுவலகம் தெரிவித்துள்ளது.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe