குவைத்தில் வெளிநாட்டினரின் 14,600 ஓட்டுநர் உரிமங்களை (லைசென்ஸ்களை) ரத்து செய்துள்ளது பொது போக்குவரத்து துறை..
பொது போக்குவரத்துத்துறை வெளிநாட்டினரின் 14,600 ஓட்டுநர் உரிமங்களை ரத்துசெய்ததுடன், அவர்கள் தங்கள் தொழில்களை மாற்றிய பின்னர் அவர்களின் ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிப்பு தடுக்கப்படுகிறது. தொழில்களை மாற்றிய பின்னர் அவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, குவைத்தில் 1,575,000 (பதினைந்து லட்சத்து எழுபத்தி ஐந்தாயிரம்) ஓட்டுநர் உரிமம் பெற்றவர்கள் உள்ளனர். இவர்களில் 670,000 பேர் குவைத் நாட்டைச் சேர்ந்தவர்கள், 850,000 பேர் வெளிநாட்டினர், 30,000 பதூன் மற்றும் 25,000 வளைகுடா குடிமக்கள்.
கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் பயிலும் வெளிநாட்டினருக்கு மனிதாபிமான அடிப்படையில் உரிமம் வழங்கப்படுகிறது, ஆனால் அவர்களின் படிப்புக்குப் பிறகு அவர்கள் உரிமத்தை திரும்ப ஒப்படைப்பதில்லை. போக்குவரத்துத் துறை அவர்களின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்து, அவர்கள் அதைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுவதில்லை, மீறி அதனை பயன்படுத்தி பிடிபட்டவர்கள் நாட்டின் சட்டங்களை மீறியதற்காக நாடு கடத்தப்படுவார்கள்.
குவைத் தமிழ் சோசியல் மீடியா.