Ads Area

மருதமுனையில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது.

 (சர்ஜுன் லாபீர்) 

நேற்று முந்தினம் மருதமுனை-03 கிராம சேவகர் பிரிவு முழுமையாக முடக்கப்பட்ட நிலையில் தொற்றாளர்களாக இணங்காணப்பட்ட குடும்பங்களுக்கான 10000/- ரூபாய் பெறுமதியான நிவாரண பொதிகள் இன்று(5) கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி தலைமையில் மருதமுனை-03 கிராம சேவகர் பிரிவில் இடம்பெற்றது. 

மேற்படி நிவாரணம் வழங்கும் நிகழ்வில் உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜெளபர்,சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.ஆர்.எம் சாலீஹ்,நிர்வாக கிராம சேவகர் உத்தியோகத்தர் யூ.எல் பத்துருத்தீன்,சமூர்த்தி முகாமையாளர் சட்டத்தரணி எம்.எம்.எம்.முபீன்,அபிவிருத்தி ஒருங்கிணைப்பாளர் கே.எல்.யாஸீன் பாவா,கிராம சேவகர் எம்.எஸ்.கையூம் ஆகியோர் பங்கேற்றனர். 

இவ் நிவாரண விநியோக செயற்திட்டமானது தனிமைப்படுத்தப்பட்ட ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe