இன்று சம்மாந்துறை செந்நெல் சாஹிரா மகா வித்தியாலயத்தில் சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலக பிரசன்னத்துடன் தொலைக் கல்வி வள நிலைய திறப்பு விழா அதிபர் A. முகம்மட் றிஸ்வான் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இதில் பிரதம அதிதியாக சம்மாந்துறை வலக்கல்விப் பணிப்பாளர் M.S.சஹுதுல் நஜீம் சேர் அவர்கள் வருகை தந்து உத்தியோக பூர்வமாக வள நிலையத்தை திறந்து வைத்தார்.
இதில் பிரதிக் கல்விப் பணிப்பாளர் A.L.A. மஜீட், உதவிக்கல்விப் பணிப்பாளர்களான A. நஸீர் , U.L.றியால் , ஆசிரிய ஆலோசகர்களான Z.M. மன்சூர் , Z.M. றிஸ்வி அதிபர்களான மீரா முகைதீன் , M.B.M. சாபிர் , முன்னாள் அதிபர் A.C.A.M. இஸ்மாயில், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், மாணவர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.